ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

காதலனை கரம்பிடிக்க வீட்டைவிட்டு மகள் ஓட்டம்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!

காதலனை கரம்பிடிக்க வீட்டைவிட்டு மகள் ஓட்டம்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!

உயிரிழந்த பெற்றோர்

உயிரிழந்த பெற்றோர்

thoothukudi | பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi

தூத்துக்குடியில் மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னத்துரை - சங்கரம்மாள் தம்பதி. இவரது மகளுக்கும் புதுப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து என்பவருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. மகளின் காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து கண்டித்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலனை கரம்பிடிப்பதற்காக அவரது பெண் நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மனமுடைந்த தாய் சங்கரம்மாள் வீட்டில் தூக்கிட்டும், தந்தை சின்னத்துரை அடைக்கலாபுரம் என்ற இடத்தில் விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Crime News, Local News, Suicide, Thoothukodi