"ஒரு நாடு ஒரு உரம்" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் முதல் நிறுவனமாக தனது வினியோகத்தை தொடங்கியது.
"ஒரு நாடு ஒரு உரம்" என்ற கொள்கை அடிப்படையில் ஸ்பிக் யூரியா என்பது பாரத் யூரியா என அழைக்கப்படும். ஸ்பிக் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமிழ்நாட்டில் தமது உற்பத்தியின் வாயிலாக வினியோகம் செய்கிறது. பாரத் யூரியா தொடக்கவிழா இன்று ஸ்பிக் ஆலையில் நடைபெற்றது.
ஸ்பிக் நிறுவனம் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்திய விவசாயத்தை பெருக்குவதற்கு தேவையான அறிவியல் பூர்வமான மற்றும் இயற்கைக்கு உறுதுணை புரியும் தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. ஸ்பிக் நிறுவனம் முதல் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் உரத் தயாரிப்பில் கவனம் செலுத்தி இந்திய கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றது.
Also Read: பிரதமர் விவசாய நிதி உதவி ₹2000 தொடர்ந்து பெற இதை உடனே செய்க..
ஒரு நாடு, ஒரு உரம் கொள்கை அடிப்படையில் பாரத் யூரியாவான ஸ்பிக் நிறுவனம் அதன் நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுணை புரிகிறது.
பாரத் யூரியா, ஸ்பிக் ஆலையில் தினமும் 2,000 டன் உற்பத்தி செய்கிறது. ஆண்டிற்கு 7,50,000 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரத் உரம் தமிழகத்தில் புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு 2100 டன் உர விநியோகத்தை தொடங்கியுள்ளது.
செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Thoothukudi