Home /News /thoothukudi /

வீடு ஒத்திக்கு கொடுத்த பணத்தை மீட்க நடையாய் நடக்கும் மூதாட்டி ... போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை

வீடு ஒத்திக்கு கொடுத்த பணத்தை மீட்க நடையாய் நடக்கும் மூதாட்டி ... போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை

தர்ணாவில் மூதாட்டி

தர்ணாவில் மூதாட்டி

Thoothukkudi | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீடு ஒத்திக்கு கொடுத்த பணத்தை மீட்டு தரக்கோரி செண்பகவல்லி என்ற மூதாட்டி வீட்டின் உரிமையாளர் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி செண்பகவல்லி (60).   கணவர் சுந்தர்ராஜ் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மந்திதோப்பு சாலையில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரிந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.350,000 ஒத்திக்கு மூதாட்டி செண்பகவல்லி குடியேறி உள்ளார்.

    இதற்கிடையில் வீட்டின் உரிமையாளர் கண்ணன் வீடு விற்பனை செய்ய உள்ளதாகவும், காலி செய்தால் ஒத்தி பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அவர் பேச்சை நம்பி மூதாட்டி செண்பகவல்லியும் வீட்டை காலி செய்து காமராஜர் நகரில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் மூதாட்டி செண்பகவல்லிக்கு கண்ணன் பணம் கொடுக்கவில்லை.

    மேலும் அந்த வீட்டையும் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி செண்பகவல்லி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். அவரின் உத்தரவுன்படி மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால்  நீதிமன்றத்தில் உள்ள அரசின் இலவச சட்ட உதவி மையத்திலும் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்பதால் தனது ஒத்திப் பணத்தை பெற்றுத் தரும்படி காவல்துறையில் கேட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால், வீட்டின் உரிமையாளரான கண்ணன் வீட்டு முன்பு மூதாட்டி செண்பகவல்லி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    Also see... தேனியிலுள்ள வைகை அணையில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மூதாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் முதலில் மூதாட்டிக்கு ரூ. 50,000 பணமும் பின்னர் மாதம் தோறும் ரூ.1 லட்சமும் தருவதாக கண்ணன் போலீசரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rent, Thoothukudi

    அடுத்த செய்தி