ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

4 நாளா கரண்ட் இல்லை.. வீட்டுக்கு ரூ.500 கேக்குறாங்க - மின் ஊழியர்களை கண்டித்து காலிகுடத்துடன் பொதுமக்கள் போராட்டம்

4 நாளா கரண்ட் இல்லை.. வீட்டுக்கு ரூ.500 கேக்குறாங்க - மின் ஊழியர்களை கண்டித்து காலிகுடத்துடன் பொதுமக்கள் போராட்டம்

மின்சாரம் கேட்டு போராட்டம் நடத்திய கோவில்பட்டி பெண்கள்

மின்சாரம் கேட்டு போராட்டம் நடத்திய கோவில்பட்டி பெண்கள்

பசுவந்தனை அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லை என்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது.

  இதுகுறித்து கிராம மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த நான்கு நாட்களாக டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்படவில்லை என்பதால் அந்த கிராமம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் , பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் மின்சாரத்துறை ஊழியர்கள் அலட்சியம் காட்டி வந்ததால் இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஓசனத்து சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்ம் அடிக்கடி பழுது ஏற்படுவது மட்டுமின்றி சில நேரங்களில் உயர் மின்சாரம் வந்து டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் வெடித்து சேதமடையும் சூழ்நிலையும் இருப்பதாக பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

  ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பசுவந்தனை மின்சார வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும், கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டதாகவும், சரிசெய்ய ஒரு வீட்டிற்கு ரூ.500 வேண்டும் என்று மின்சார வாரிய ஊழியர்கள் கேட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

  போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மின்சாரம் விரைந்து வழங்குவது மட்டுமின்றி புதிய டிரான்ஸ்பாரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Also see... ஸ்கூலுக்கு லேட்.. கடத்தியதாக சிறுவர்கள் பொய்.. கம்பளி விற்ற வடமாநிலத்தவர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்... தேனியில் அதிர்ச்சி சம்பவம்

  அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Electricity, Kovilpatti, Thoothukodi