Home /News /thoothukudi /

எல்லாம் மாடல்தான்.. யாரும் ஆட்சி செய்யுறது இல்லை - சீமான் விமர்சனம்

எல்லாம் மாடல்தான்.. யாரும் ஆட்சி செய்யுறது இல்லை - சீமான் விமர்சனம்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாத தமிழக அரசு மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது ஏன்?

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாத தமிழக அரசு மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது ஏன்?

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாத தமிழக அரசு மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது ஏன்?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Tiruchendur (Thiruchendur)
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி,  வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் அளவிலே உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் என தெரிவித்தார். ஆனால் கருணாநிதி ஆட்சியின்போது தமிழில் நீதிமன்றங்களில் வழக்காட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசு தலைவரின் கையெழுத்திற்காக எனது இனமே காத்துக் கொண்டிருக்கிறது என வேதனை தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என வலியுறுத்தினார்.

ALSO READ | நைஜீரியா காதலிக்கு தாலிகட்டிய தமிழக இளைஞர்.. தமிழ்நாட்டின் மருமகளானார் நைஜீரிய பெண்!

ராகுல் காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்கு இல்லை. ஜிஎஸ்டி, நீட், சிஏஏ, போன்ற திட்டங்களுக்கு  தொடக்கமே காங்கிரஸ் கட்சி தான்  நீ பிள்ளையைப் பெற்று பெயர் வைத்துள்ளீர்கள் நான் வளர்க்கிறேன் என மோடி தெரிவிப்பார்.  இதனால் தான் காங்கிரஸ் கட்சியினரால் எதிர்த்து பாராளுமன்றத்தில்  முடியவில்லை எனவும் பேசினார்.

விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் எச். ராஜா செய்து வருகிறார் அவருக்கு எனது நன்றி என தெரிவித்து கொண்ட அவர், அனைவரும் மாடலாக  தான் இருக்கிறார்களே தவிர ஆட்சி செய்யவில்லை எனவும் விமர்சனம் செய்தார். மேலும், நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை என தெரிவித்த தமிழக அரசு தற்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏன்? தற்போது நிதி நிலைமை வலிமை பெற்று விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
Published by:Anupriyam K
First published:

Tags: Naam Tamilar katchi, Seeman, Tiruchendur

அடுத்த செய்தி