ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்பியின் வீடு

தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்பியின் வீடு

Thoothukudi News : தூத்துக்குடி எம்பி கனிமொழி வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழிக்கு தூத்துக்குடி குறிஞ்சி நகரில் வீடு மற்றும் அலுவலகம் அடுத்தடுத்து அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு அங்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், வீட்டின் கதவை நீண்ட நேரம் உற்றுநோக்கி பார்த்திருந்தார். சந்தேகப்படும்படியாக இந்த நபரின் நடவடிக்கை இருந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் மிக அருகே உள்ள தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

அதற்குள் மர்ம நபர் வீட்டின் காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மர்ம நபரை எம்பி அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க : 2ம் நிலை காவலர் பணித் தேர்வு: 67,000 பேர் ஆப்சென்ட்

இந்த மர்ம நபரிடம் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கனிமொழி எம்.பியின் தூத்துக்குடி அலுவலக உதவியாளரிடம் கேட்டபோது, நேற்று ஒரு நபர் உள்ளே நுழைய முன்றதாகவும்,  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கனிமொழி எம்பியின் வீட்டில் புகுந்த மர்ம நபரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி செய்தியாளர் - முரளிகணேஷ்

First published:

Tags: CM MK Stalin, Crime News, DMK, Kanimozhi, Thoothukudi