ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

வீடு புகுந்து பூ வியாபாரி வெட்டி படுகொலை.. கோவில்பட்டியில் பரபரப்பு

வீடு புகுந்து பூ வியாபாரி வெட்டி படுகொலை.. கோவில்பட்டியில் பரபரப்பு

கொலை செய்யப்பட்ட அழகுதுரை

கொலை செய்யப்பட்ட அழகுதுரை

கோவில்பட்டியில் வீடு புகுந்து நடைப்பெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மஞ்சநம்பி கிராமத்தில் அழகுதுரை என்ற பூ வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மஞ்ச நம்பிகிணறு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மகன் அழகுதுரை (28). இவர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து பூக்களை கொள்முதல் செய்து பூ மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த அழகுதுரையை மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Read More : திருமணமான 18 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - சந்தேக மரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

பலத்த காயமடைந்த அழகுதுரையை  அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த அழகுதுரை உடலை கயத்தாறு போலீசார் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு  அனுமதித்துள்ளனர்.

 மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அழகுதுரைக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2மகள்கள், ஒரு மகன்  உள்ளனர்.வீடு புகுந்து நடைப்பெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Crime News, Murder case, Thoothukudi