சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் இன்று விடுதலையானார்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையுமான என்.பெரியசாமி மீது 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த என்.பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ALSO READ | 10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?
இந்த வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கீதாஜீவனின் தந்தை உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுவது நிரூபிக்கப்படவில்லை என கூறி 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நீதி கிடைத்துள்ளதாகவும், நியாயம் வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர்: சிவமணி, தூத்துக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Court, Income tax, Released