“அய்யய்யோ விடுங்க ... நீங்க வேற !” என சசிகலாபுஷ்பா பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கி பேசினார்.
இதையும் படிக்க : அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் யார்? ஒரு வரியில் பதில் கொடுத்த சசிகலா!
அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கர்ப்பிணி தாய்மார்கள் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், அது குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்பதால் ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கர்ப்பிணி பெண்கள் டென்ஷன் இல்லமால் இருக்க வேண்டும், வன்முறை காட்சி உள்ள திரைப்படங்களை தவிர்க்க வேண்டும், நடிகர் வடிவேல் நகைச்சுவை காட்சிகளை பார்க்க வேண்டும், மெல்லிய இசை கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அமைச்சர் கீதாஜீவனை பற்றி பாஜக மாநில துணை தலைவர் சசிகலாபுஷ்பா பேச்சு குறித்து கேட்டதற்கு அய்யய்யோ விடுங்க ... நீங்க வேற ! அவ கிடக்கா என கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, BJP cadre, DMK, Sasikala Pushpa, Thoothukudi