முகப்பு /செய்தி /தூத்துக்குடி / திமுக பிரமுகரை கொல்ல முயற்சித்த வழக்கு... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!

திமுக பிரமுகரை கொல்ல முயற்சித்த வழக்கு... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடியில் திமுக பிரமுகரை கொல்ல முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்த சுரேஷை, கடந்த 2011ஆம் ஆண்டு உட்கட்சி மோதலில் சிலர், கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். மேலும், சுரேஷ் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தி வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் சசிக்குமார் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும், அதனால், சசிகுமாரை கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இது தொடர்பாக கொலை செய்ய தூண்டியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகநேரி காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையில், கொலை முயற்சி தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

First published:

Tags: Court Case, Court released, Ministers