ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்குவதற்கு நிரந்தர தடை.. அதிரடி உத்தரவு!

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்குவதற்கு நிரந்தர தடை.. அதிரடி உத்தரவு!

மாதிரி படம்

மாதிரி படம்

கோயில் நிர்வாகம் உத்தரவை நியாயமானது என கருதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

திருச்செந்தூர் கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த சித்தரங்கதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கந்தசஷ்டி விழாவின் போது பக்தர்கள் திருச்செந்தூர் கோயில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பார்கள் என்றும், ஆனால் பிரகாரத்துக்குள் தங்கி பூஜை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் எனவும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, கோயில்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என தெரிவித்தனர்.

விரதம் மற்றும் இதர நடவடிக்கைக்காக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் உள் பிரகாரத்தில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது என்றும், இது நியாயமானது என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இதே நிலையை பராமரிக்குமாறு உத்தரவிடுவதாகவும் அறிவித்தனர்.

First published:

Tags: Local News, Madurai High Court, Murugan temple, Tiruchendur