Home /News /thoothukudi /

குலசை தசரா திருவிழாவில் ஆபாச பாடல், நடனத்திற்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

குலசை தசரா திருவிழாவில் ஆபாச பாடல், நடனத்திற்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

தசரா திருவிழா

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழாவிற்கு நேரில் சென்று பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் விதிக்கப்பட்ட தடை கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi | Tamil Nadu
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் ஆபாச நடனத்திற்கும்,  பாடலுக்கும் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

    தூத்துக்குடி மாவட்டம்   குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில்  துணை நடிகைகள்,  நடன அழகிகள் உள்ளிட்டோர் ஆபாசமாக நடனமாடுவதற்கும், ஆபாசமான பாடல்களை ஒலிப்பதற்கும்  இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த விழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த திருவிழாவில் தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருவிழாவில் ஆன்மீக பாடல்கள் மட்டுமே இசைக்க வேண்டும் என்றும்  ஆபாச பாடல்கள் மற்றும் நடனங்கள் இடம்பெற கூடாது என தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

    ALSO READ | சிறார் குற்றங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் - முதலமைச்சர் ஸ்டாலின்

    இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  திருவிழாவில் பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழாவிற்கு நேரில் சென்று பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் விதிக்கப்பட்ட தடை கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

     
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Dasara festival, Madurai High Court, Tuticorin

    அடுத்த செய்தி