Home /News /thoothukudi /

மின்சார திருத்த சட்ட மசோதாவில் இலவச மின்சாரத்தை நிறுத்துவோம் என்று சொல்லவில்லை - எல்.முருகன்

மின்சார திருத்த சட்ட மசோதாவில் இலவச மின்சாரத்தை நிறுத்துவோம் என்று சொல்லவில்லை - எல்.முருகன்

எல்.முருகன்

எல்.முருகன்

Thoothukudi district News: தமிழகத்தில் போதைப்பொருள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது என்பது அனைவரும் கவலை கொள்ளும் விஷயம் என தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த மத்திய இயையமைச்சர் எல். முருகன் கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மத்திய இணையமைச்சர் எல். முருகன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய இளைய தலைமுறையினர் சுதந்திர போராட்டத்தை பற்றியும், சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் மூவர்ண தேசிய கொடியை மக்கள் 13ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை வீடுகளில் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மக்களும் முன்வந்து 13ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கூறினார்.

    தமிழக முதலமைச்சர் போதைப் பொருளை ஒழிக்க சர்வாதியாக மாறுவேன் என்று தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்த எல்.முருகன், முதலமைச்சர் அவரது ஆட்சியில் ஊழலை ஒழிக்க சர்வாதிகாரியாக மாறுவார் என்றும், போதைப்பொருள் தமிழகத்தில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது என்பது அனைவரும் கவலை கொள்ளும் விஷயம் எனவும் தமிழக அரசு சீரியசாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதாவில் இலவச மின்சாரத்தை நிறுத்துவோம் என்று சொல்ல வில்லை என்றும், மாறக சீர்திருத்தத்தையே கொண்டு வருவதாகவும் கூறிய இணையமைச்சர், முழு சட்டமும் வந்த பிறகு தான் அது குறித்து தெரியவரும் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து பேசிய எல்.முருகன், ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது இளைஞர்களின் இன்று கனவாக உள்ளது என்றும், இன்று பல லட்சம் இளைஞர்கள் தானாக முன்வந்து ‘அக்னிபத்’ திட்டத்தில் தங்களை பதிவு செய்து வருகின்றனர். ‘அக்கினிபத்’ திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

    Must Read : நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு

    மேலும், மீன் வளத்துறை மூலம் கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை விரிவாக்கம் செய்வும் இருப்பதாக தெரிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சென்னை காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த டெண்டர் விடபட இருப்பதாக கூறினார். அத்துடன், 20 க்கும் மேற்பட்ட இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யபட உள்ளது என்றும் தெரிவித்தார்.

    செய்தியாளர் - பி.முரளிகணேஷ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: BJP, Electricity, Independence day, L Murugan, Thoothukudi

    அடுத்த செய்தி