ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா தொடக்கம்..! அக்.5-ல் சூரசம்ஹாரம்!

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா தொடக்கம்..! அக்.5-ல் சூரசம்ஹாரம்!

குலசை தசரா திருவிழா

குலசை தசரா திருவிழா

Kulasai Dasara : 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம், அடுத்த மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kulasekaram (Kulasekarapuram) | Thoothukkudi | Thoothukkudi (Thoothukudi) | Tiruchendur (Thiruchendur) | Tamil Nadu

  தூத்துக்குடி மாவட்டம் குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.

  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உலக பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. வடமாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இந்த கோயிலில்தான் தசரா திருவிழா நடைபெறுகிறது. இதனால் இந்த திருவிழாவை ஒட்டு மொத்த தமிழ்நாடும் கொண்டாடுகிறது.

  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு குலசை தசரா வெகு விமரிசையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ALSO READ | அதிமுக கலவர வழக்கில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு - சிபிசிஐடி தகவல்! யாரிடம் இருந்தது தெரியுமா?

  10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம், அடுத்த மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, உற்சவர் ஸ்ரீ முத்தாரம்மனுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு செப்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தசரா திருவிழா தொடங்கியது.

  10 நாட்களும் இரவு 10 மணிக்கு மேல் முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அம்மன் வீதியுலாவுடன் விரதமிருக்கும் பக்தர்களும் பல்வேறு வேடமணிந்து வீதியுலா சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Dasara festival, Kulasekarapattinam, Kulasekharapattinam