முகப்பு /செய்தி /தூத்துக்குடி / ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய கோவில்பட்டி இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

மாதிரி படம்

மாதிரி படம்

கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி மருந்தை வாங்கிய நிலையில், அவரிடம் கோவை சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெடி மருந்து வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, கோவையில் பழக்கடையில் பணிபுரிந்து வந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த மே மாதம் 13-ம் தேதி பிளிப்கார்ட் மூலம் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை கோவை காவலர் பயிற்சி வளாகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, தனது எதிரி மகாராஜன் என்பவர் மீது குண்டு வீசி கொலை செய்வதற்கு வெடிமருந்துகள் வாங்கியதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

top videos

    இதனால், தேசிய புலனாய்வு முகமையினர் மாரியப்பனை சரவணம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு இந்த வழக்கு விசாரணையை முடித்துக் கொண்டனர். இந்நிலையில், மாரியப்பனிடம் சரவணம்பட்டி போலீசார் மேல் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரிடம் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் மாரியப்பன் கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Coimbatore, Kovilpatti, NIA