Home /News /thoothukudi /

தெருவுக்கு வீர சாவர்க்கர் பெயர்: விரைந்து வந்து அழித்த அதிகாரிகள்.. கோவில்பட்டியில் பரபரப்பு

தெருவுக்கு வீர சாவர்க்கர் பெயர்: விரைந்து வந்து அழித்த அதிகாரிகள்.. கோவில்பட்டியில் பரபரப்பு

தெருவுக்கு வீர் சாவர்க்கர் பெயர்

தெருவுக்கு வீர் சாவர்க்கர் பெயர்

கோவில்பட்டி 20வது வார்டில் பா.ஜ.கவை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். அவரிடம் கேட்டுவிட்டுதான் தெருவிற்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்டியதாக பெயரை எழுதியவர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவில்பட்டியில் திடீரென  தெரு ஒன்றிற்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீர சாவர்க்கர் பெயர் சூட்டப்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நகராட்சி அதிகாரிகள்,  அனுமதி பெறாமல்  எழுதப்பட்ட தெரு பெயரை அழித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டில் எட்டயபுரம் சாலையில் மது விலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் அருகே 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று திடீரென அந்த தெருவின் தொடக்கத்தில் கோவில்பட்டி நகராட்சி, வீரசாவர்க்கர் தெரு என்று புதிய பெயர் சூட்டப்பட்டு சுவற்றில் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையெடுத்து நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து  அதனை அழித்தனர்.  தங்களிடம் எவ்வித முன் அனுமதி பெறாமல் சிலர் தாங்களாகவே தெருவிற்கு பெயர் சூட்டியதால் அதனை அழித்ததாக  நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்து மகாசபா அமைப்பினை சேர்ந்த சிலர் தெருக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்டி எழுதியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழக - கேரள எல்லையின் நடுவே நிற்கும் உடல்நலம் பாதித்த யானை... யார் சிகிச்சை அளிப்பது என இருமாநில வனத்துறையினர் குழப்பம்

20வது வார்டில் பா.ஜ.கவை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். அவரிடம் தாங்கள் தெரிவித்து விட்டு எழுதியதாக இச்செயலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக
காவல்துறையினரிடம் கேட்ட போது நகராட்சி அனுமதி இல்லாமல் பெயர் எழுதியுள்ளனர். தற்பொழுது வரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

 
Published by:Murugesh M
First published:

Tags: BJP, Kovilpatti, RSS

அடுத்த செய்தி