ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கொலை செஞ்சா என்ன தண்டனை.. ஜாமீன் கிடைக்குமா.. சித்தப்பாவை கொலை செய்து போலீசிடமே ஐடியா கேட்டு சிக்கிய இளைஞர்

கொலை செஞ்சா என்ன தண்டனை.. ஜாமீன் கிடைக்குமா.. சித்தப்பாவை கொலை செய்து போலீசிடமே ஐடியா கேட்டு சிக்கிய இளைஞர்

தூத்துக்குடி கொலை

தூத்துக்குடி கொலை

Thoothukudi News : கோவில்பட்டில் தொழில்போட்டியில் சொந்த சித்தப்பாவையே இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இருளப்பன் என்பவரது மகன் ஆனந்தராஜ் ( வயது 30). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வாகன காப்பகத்தில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மேலும் உடலை சுற்றி மிளகாய் பொடியும் தூவப்பட்டு இருந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜிசரவணன் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கோவில்பட்டி (பொறுப்பு) லோகேஸ்வரன் மேற்பார்வையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ் க்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இவருக்கும் சாத்தூரை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.  அந்தப்பெண் ஆனந்தராஜுடன் இரு சக்கர காப்பகத்தில் இணைந்து பணி புரிந்துவந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் -மனைவிக்கு இடையே பிரச்சனை என்பதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலை தான் ஆனந்தராஜுக்கும், அந்தப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ஆனந்தராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டி காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு எதுவும் காரணமா, ‌ முன்பகை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை துரிதப்படுத்தினர். முதலில் ஆனந்தராஜ் கொலை வழக்கு தொடர்பாக இளம்பெண்ணின் கணவரை போலீசார் சந்தேகப்பட்டுள்ளனர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும்நிலையில் ஆனந்தராஜ்வுடன் தொழில் செய்து வருவதால், அந்த கோபத்தில் கொலை நடைபெற்றதா என போலீசார் விசாரித்தனர். ஆனால் அந்தநபர் திருப்பூரில் வேலை செய்து வருவதால் அவர் கொலை சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு விசாரணையை வேறு கோணத்தில் நடத்த முயற்சி செய்துள்ளனர்.

போலீசார் சாத்தூருக்கு விசாரணைக்கு சென்ற போது ஆனந்தராஜ்  அண்ணன் சுந்தர்ராஜ் மகன் கமலேஷ் போலீசாருடன் சென்று  ஆனந்தராஜ் வீடு உள்ளிட்டவைகளை காண்பித்து போலீசாருடன் இருந்துள்ளார். அப்போது கொலை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும், ஜாமீன் எப்போது கிடைக்கும் என்று உளவுத்துறை போலீசார் ஒருவரிடம் நைசாக கேட்க, போலீசார் தங்களது விசாரணையை கமலேஷ் பக்கம் திருப்ப கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொழில்போட்டி காரணமாக கமலேஷ்(19) மற்றும் 16வயது சிறுவன் இருவரும் ஆனந்தராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையெடுத்து போலீசார் இருவரையும் கைது செய்ததது, மட்டுமின்றி கொலைக்கு பயன்படுத்திய பைக் மற்றும் அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்ட அனந்தராஜ் நடத்தி வரும் இருசக்கர வாகன காப்பகத்தினை முதலில் ஆனந்தராஜ் அண்ணன் சுந்தர்ராஜ் மற்றும் அவரது உறவினர் ராமமூர்த்தி இருவரும் நடத்தி வந்துள்ளனர். அதில் நஷ்டம் ஏற்பட்டு நடத்த முடியமால் இருந்துள்ளனர். அப்போது ஆனந்த்ராஜ் மற்றும் சாத்தூரைச் சேர்ந்த இளம்பெண் இருவரும் சுந்தர்ராஜ்-க்கு 3,80,000 கொடுத்து இரு சக்கர வாகன காப்பகத்தினை நடத்தி வந்துள்ளனர். தற்பொழுது இரு சக்கர வாகன காப்பகம் நன்றாக போவதாக தெரிகிறது.

இதற்கிடையில் இருசக்கர வாகன காப்பகத்தினை தனக்கு தரும்படி சுந்தர்ராஜ் தனது தம்பி ஆனந்தராஜ்விடம் கேட்டுள்ளார். தனக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்தால் இருசக்கர வாகனத்தினை தருவதாககூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட  அன்று சுந்தர்ராஜ் மகன் கமலேஷ் மற்றும் 16வயது சிறுவன் இருவரும் பைக்கில் கோவில்பட்டிக்கு வந்துள்ளனர்.  அப்போது இருசக்கரவாகன காப்பகத்தில் இருந்த ஆனந்தராஜிடம் இரு சக்கர வாகன காப்பகத்தினை மீண்டும் தங்களுக்கு தரும்படி கமலேஷ் கேட்டுள்ளார். 5 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் தருவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் மற்றும் 16வயது சிறுவன் இருவரும் தாங்கள் கொண்டு வந்த மிளகாய் பொடியை ஆனந்தராஜ் மீது தூவி கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

First published:

Tags: Kovilpatti, Local News, Murder, Tamil News, Thoothukudi