ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கோவில்பட்டி : டாஸ்மாக் கடையில் ரூ 1.5 லட்சம் கொள்ளை.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது

கோவில்பட்டி : டாஸ்மாக் கடையில் ரூ 1.5 லட்சம் கொள்ளை.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டாஸில் கைது செய்யப்பட்ட இருவர்

குண்டாஸில் கைது செய்யப்பட்ட இருவர்

Crime News | டாஸ்மாக் கொள்ளை வழக்கில் கைதான நபர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு உள்பட தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

கோவில்பட்டி  அருகே டாஸ்மார்க் ஊழியர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி அருகே எட்டயபுரம் காவல் எல்லைக்குள் உட்பட்ட முத்துலாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 18-11-2022 அன்று இரவு 10 மணி அளவில் சூப்பர் வைசர் ஐயப்பசாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் பணியில் இருந்துள்ளனர். வேலையை முடித்து புறப்பட தயாரானபோது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் வந்த இருவர், டாஸ்மார்க் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி  ரூ.1,50,470 பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து டாஸ்மார்க் சூப்பர் வைசர் ஐயப்பசாமி எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில், எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  டாஸ்மார்க் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் இதனை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தினர்.

Also Read:  இன்ஸ்டா பெண்கள்தான் குறி.. போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்.. தென்காசி வாலிபர் கைது

இதில் சிலுவைப்பட்டி துரைசிங் நகரைச் சேர்ந்த சங்கிலி கருப்பன் என்பவரின் மகன்  விக்ரம் என்ற விக்கி (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து  மகன் ஆனந்த் என்ற அசோக் (29) ஆகிய இருவரையும்  எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான அசோக் என்பவனுக்கு வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு உற்பட தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் 29 வழக்குகளும் விக்ரம் என்ற விக்கிக்கு 5 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டம் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் விக்கி, அசோக் இருவரும் குண்டர் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனர்.

First published:

Tags: Crime News, Local News, Tuticorin