ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க.. அசிங்கமா பேசுறாங்க - அரசுமருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

கோவில்பட்டி அரசு மருத்துவமனை

கோவில்பட்டி அரசு மருத்துவமனை

மகப்பேறு பிரிவுக்கு என்று அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். அந்த புதிய கட்டிடத்தில் தான் மகப்பேறு பிரிவு தற்பொழுது செயல்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகளை பார்க்க  மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதால் பொது மக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவுக்கு என்று அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். அந்த புதிய கட்டிடத்தில் மகப்பேறு பிரிவு தற்பொழுது செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மட்டுமின்றி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய கட்டிடப்பிரிவில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு புறம் இருக்க மறுபுறம், உள்ளே சிகிச்சை பெறுபவர்களை காண அனுமதிப்பதில்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக உள்ளே சிகிச்சை பெறுபவர்களுடன் ஒருவர் தங்க அனுமதிப்பது வழக்கம். அதேபோன்று சிகிச்சை பெறுபவர்களை பார்க்க என்று தனி நேரம் ஒதுக்கீடு செய்வது அனுமதிப்பது உண்டு. ஆனால் இங்கு அவ்வாறு நேரம் ஒதுக்கீடு செய்யாமல் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க அனுமதிக்க விடுவதில்லை என்று பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிக்க : ’ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும்’ - போனில் வந்த மிரட்டலால் தூத்துக்குடியில் பரபரப்பு

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறந்ததும், குழந்தையின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பார்க்க ஆர்வமாக வந்தால் உள்ளே அனுமதிக்க மறுப்பதால் பல மணி நேரம் வெளியில் காத்து கிடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால் மட்டும் உள்ளே சென்று பார்க்க அனுமதிப்பதாகவும், இல்லை பிறந்த குழந்தையை வெளியே வந்து காண்பிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை ஊழியர்களின் கேட்டால் தரக்குறைவாக வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பிவிடும் சூழ்நிலையும் உள்ளது.

இதைபோன்று இன்றும் வழக்கம் போல உள்ளே அனுமதிக்கவில்லை என்பதால் உள்ளே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் விரைந்து வந்து மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சிகிச்சை பெறுபவர்களை பார்க்க நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பணம் வசூலித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Published by:Raj Kumar
First published:

Tags: Govt hospital, Govt hospitals, Kovilpatti