ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

200 ரூபாய் காசுக்காக பூவியாபாரி வெட்டிப்படுகொலை - மதுவாங்குவதில் ஏற்பட்ட தகராறில் அரங்கேறிய கொடூரம்

200 ரூபாய் காசுக்காக பூவியாபாரி வெட்டிப்படுகொலை - மதுவாங்குவதில் ஏற்பட்ட தகராறில் அரங்கேறிய கொடூரம்

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

Kovilpatti | மது அருந்த 200 ரூபாய் கொடுக்காததால் வந்த தகராறில் பூ வியாபாரியை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kovilpatti | Thoothukkudi | Tamil Nadu

கோவில்பட்டி அருகே பூ வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தினை சேர்ந்தவர் அழகுதுரை(28). இவர் அப்பகுதியில் பூ விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் பூக்களை கொள்முதல் செய்து கோவில்பட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளன. மேலும் அழகுதுரை புதிய தமிழகம் கட்சியின் கிளை செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அழகுதுரை வீட்டின் முன் அமர்ந்து இருந்த போது மர்ம நபர்கள் சிலர் திடீரென அழகுதுரையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடிய அழகுதுரையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் அழகுதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் மற்றும் கயத்தார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அழகுதுரை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க | பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - அதிர்ச்சி சம்பவம்

காவல்துறையினரின் விசாரணையில் அழகுதுரை நேற்று முன்தினம் செட்டிகுறிச்சியில் மாடசாமிக்கு சொந்தமான டாஸ்மாக் மது பாரில் தனது நண்பர் ஒருவருக்காக மது வாங்க சென்றுள்ளார். அப்போது அழகுதுரை ஊரைச் சேர்ந்த கனகராஜ் அங்கு மது அருந்தி கொண்டு இருந்ததாக தெரிகிறது. தனக்கு மது பாட்டில் வாங்க வேண்டும் என்றும், பணம் குறைவாக இருப்பதால் 200 ரூபாய் தரும்படியும், அழகுதுரையிடம் கேட்டுள்ளார். இதற்கு அழகுதுரை மறுக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கனகராஜ் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர் ஸ்டாலின், கனகராஜ்க்கு ஆதரவாக, அழகுதுரையிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையெடுத்து அங்கிருந்தவர்கள் இரு தரப்பினையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, கனகராஜ் உறவினர்களோடு கும்பலாக, அழகுதுரையை சத்தம் போடுவதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரத்தில் கனகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அழகுதுரையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, ஸ்டாலின் , மாடசாமி, அவரது மகன் பட்டுராஜ், கனகராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், நாகராஜ், பாலமுருகனை தீவிரமாக  தேடி வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Arrest, Crime News, Kovilpatti, Murder