ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கோவில்பட்டி பகுதியில் பொய்த்து போன மழை - விலைக்குத் தண்ணீர் வாங்கி பயிர்களை பாதுகாக்கும் விவசாயிகள்

கோவில்பட்டி பகுதியில் பொய்த்து போன மழை - விலைக்குத் தண்ணீர் வாங்கி பயிர்களை பாதுகாக்கும் விவசாயிகள்

விவசாய நிலத்திற்கு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள்

விவசாய நிலத்திற்கு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள்

Kovilpatti | கோவில்பட்டி பகுதியில் போதியளவு மழை இல்லை என்பதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு ஊற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு ரூ 20,000 செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் ராபி பருவத்திற்கான விவசாய பணிகளை கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். உளுந்து, பாசி, மக்காச்சோளம், மிளாகாய், பருத்தி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்க உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தும் தெளித்துள்ளனர்.

பயிர்கள் வளர்ந்து வரக்கூடிய நிலையில் போதிய மழை இல்லை என்பதால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் விதைகள் முளைக்கமால் கருகி போன நிலையும் ஏற்பட்டு மீண்டும் விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யும் என்று விவசாயிகள் காத்திருந்த நிலையில் சீராக மழை பெய்யாமல் பெயரளவிற்கு மழை பெய்த காரணத்தினால் செடிகள் முளைப்புதிறன் குறைந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதும் கோவில்பட்டி பகுதியில் மழை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் கருகி வரும் பயிர்களை பாதுகாக்க வேறு வழியல்லாமல் விவசாயிகள் டிராக்டர் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு ஊற்றி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் அதுவரை பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விவசாயிகள் விலைக்கு தண்ணீர் கொடுத்து பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர்.

ஏற்கனவே விதை, உரம் விலை உயர்வு, உரத்தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில் போதிய மழையின்மை காரணமாக பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். ஒரு டிராக்டர் 200 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி அதனை பயிர்களில் ஊற்ற 10 பேர் வரை வேலைக்கு வரவைத்து ஊற்றி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்த காரணத்தினால் இந்தாண்டும் நல்ல மழை இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளை தொடங்கினோம். ஆனால் மழை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி வருகிறோம். ஒருபக்கம் உரத்தட்டுப்பாடு, உர விலை உயர்வு இருந்து வருகிறது. மறுப்பக்கம் உரத்துடன் மற்ற பொருள்களையும் வாங்க கட்டயப்படுத்தி வருகிறார்கள். தற்பொழுது தினமும் பயிர்களை பாதுகாக்க 20,000 ரூபாய் செலவு செய்து வருகிறோம்” என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Also see... Weather - Rain News Live: கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மேலும், ”100 நாள் வேலையும் சரிவர கிடைக்கவில்லை. போதிய மழை இல்லை என்பதால் விவசாய பணிகளும் சரிவர நடவடிக்கைவில்லை என்றும், இதனால் குறைவான ஊதியம் தான் கிடைப்பதாகவும், இன்றைக்கு அனைத்து விலைவாசியும் உயர்ந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் விவசாய தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும்,” எதிர்பார்த்த மழை இல்லை என்பதால் விவசாயிகள் பயிர்களை காக்க போராடி வருகிறோம். இனியும் மழை இல்லையென்றால் பயிர்கள் கருகி அழிந்து போய்விடும்” என வேதனையுடன் கூறுகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Farmers, Kovilpatti, Rain, Water