தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்னொளியில் நடைபெற்ற நடனபோட்டிகளில் நடிகர் அஜித்தின் முகமூடி அணிந்து ஆடிய குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் பெற்றனர்.
கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ஓபன் கேட் நடனப்பள்ளியில் 9ம் ஆண்டு விழா மற்றும் நடனப்போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் ஓபன்கேட் நடனப்பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். தனிநபர், குழு போட்டி, ஜோடி போட்டி என 3 பிரிவுகளாக நடனப்போட்டிகள் நடைபெற்றது. இதில் நடனப்பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ் மற்றும் திரைப்பட பாடல்களுக்கு நடனமான அசத்தினர்.
அதிலும் சிறப்பாக துணிவு படத்தின் சில்லா, சில்லா பாடலுக்கு மாணவர்கள் அஜித் உருவம் அடங்கிய முகமூடியை அணிந்து நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். தொடர்ந்து நடனபோட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர்.ராஜூ வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajith, Kadambur raju, Kovilpatti, Local News, Thoothukudi, Thunivu