ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுப்பட்ட நிலையில் கணவன் மனைவி சடலமாக மீட்பு - கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்

பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுப்பட்ட நிலையில் கணவன் மனைவி சடலமாக மீட்பு - கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்

கோவில்பட்டி சம்பவம்

கோவில்பட்டி சம்பவம்

Crime news: புதிய வீடு கட்டியது தொடர்பாக அதிகளவு கடன் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்த ராஜபாண்டி, பரணி செல்வி தம்பதியினர் வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் ராஜபாண்டி (41). ராஜபாண்டி கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பரணிசெல்வி(39) இவர் லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு மனோஜ்குமார்(19) என்ற மகனும், உமாமகேஸ்வரி(15) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதியதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். புதிய வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி இருந்துள்ளனர். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை இருந்து வந்தாக கூறப்படுகிறது. இன்று மாலையில் மகன் மனோஜ்குமார் பெட்டிக்கு கடைக்கு சென்றுள்ளார். மகள் உமாமகேஸ்வரி வெளியே சென்று விட தம்பதியினர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் மனோஜ் கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. வெகுநேரமாக வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படவில்லை, தனது, தாய், தந்தை இருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது இருவரும் எடுக்கவில்லை என்றதும் சந்தேகமடைந்த மனோஜ் அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் கதவினை உடைத்து பார்த்த போது உள்ள பரணிசெல்வி கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதே போன்று ராஜபாண்டியும் கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றிய உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் வாசிக்க: 12 பேருக்கு சம்மன்.. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் புலனாய்வுக்குழு முக்கிய முடிவு!

சம்பவ இடத்தினை கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் கணவன் -மனைவி கழுத்தறுப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

புதிய வீடு கட்டியது தொடர்பாக அதிகளவு கடன் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதில் இறந்தார்களா, ராஜபாண்டி தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறும் எதுவும் காரணமா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by:Salanraj R
First published:

Tags: Crime News, Kovilpatti