ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

மேடையில் மாறி மாறி புகழ்ந்து கொண்ட கனிமொழி - கடம்பூர் ராஜு..! எதற்கு தெரியுமா?

கடம்பூர் ராஜு - கனிமொழி

கடம்பூர் ராஜு - கனிமொழி

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் நினைவாக கோவில்பட்டியில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi

தூத்துக்குடி அருகே கி.ரா.மணிமண்டபத்தில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பியும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் நினைவாக கோவில்பட்டியில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில், கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா`ஜீவன், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கனிமொழி, கட்சி வேறுபாடுகளை கடந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கி.ரா.வின் நிகழ்வில் பங்கேற்பது பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகவும், அப்போது தமிழர் பண்பாட்டினை காக்க பாடுபட்ட கி.ரா.வின் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும் கி.ராவிற்கான மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளனர். அந்த வகையில் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர் என்பதில் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

விழாவில் நடைபெற்ற துமிடி இசை நிகழ்ச்சியை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி.

First published:

Tags: Kadambur raju, Kadambur Raju comment, Kanimozhi, Local News, Thoothukudi