ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கந்தசஷ்டி 2022: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்... சூரபத்மன் வதத்தை காண திரளும் பக்தர்கள்

கந்தசஷ்டி 2022: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்... சூரபத்மன் வதத்தை காண திரளும் பக்தர்கள்

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

சுவாமி ஜெயந்திநாதர் சூர பத்மனை வதம் செய்யும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகரெ நாளான நாளை சூரசம்காரம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து இன்றே கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழாக்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி விரதத்தை கடைபிடித்து வருகின்றனர். மேலும் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தினமும் யாகசாலை பூஜையும், தீபாராதனையும், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவின் சிகரெ நாளான நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் காண்பதற்காக சூரசம்ஹாரம் நடைபெறக்கூடிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இதையும் படிங்க: மாமனும் மருமகனும் மருவும் மதுரை மலை - பழமுதிர்சோலைமலை திருத்தலம், வரலாறு, சிறப்பு

    சுவாமி ஜெயந்திநாதர் சூர பத்மனை வதம் செய்யும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Kandha Sashti, Soorasamharam, Thiruchendur