ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா... வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா... வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

Tiruchendur | திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchendur (Thiruchendur), India

  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

  திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி கிடையாது. மாற்று ஏற்பாடாக, பக்தர்கள் தங்கி விரதம் எடுப்பதற்காக, கோவில் அருகிலேயே ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 18 தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை யாகசாலை பூஜையுடன் திருவிழா தொடங்கியது.

  யாக பூஜையை அடுத்து, பக்தர்கள் கடலில் புனித நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து  வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. கந்தசஷ்டி திருவிழாவை ஒட்டி மாவட்ட காவல்துறை சார்பில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இதே போல மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டபடி  சுப்பிரமணியரை வழிபட்டனர். பக்தர்கள் ஆறு நாட்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதமிருந்து வேண்டுதலை நிறைவேற்றுவர். வேல் வாங்கும் விழா 29ம் தேதியும், சூரசம்ஹாரம் 30ம் தேதியும் நடைபெற உள்ளது.

  தொடர்ந்து சண்முகர் சன்னதியில் காலை 8 மணிக்கு தெய்வானை வள்ளி சமேத சண்முக பெருமாளுக்கு வேத மந்திரங்கள், மேல தாளங்கள் முழங்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது

  இதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க விமர்சையாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்பு கட்டிக்கொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.

  ' isDesktop="true" id="824728" youtubeid="m3IpF_CZ6wo" category="thoothukudi">

  மதுரையில்  கந்த சஷ்டி விழா

  திருப்பரங்குன்றம், திருமங்கலம், மதுரை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவையொட்டி கையில் காப்பு கட்டிக்கொண்டு ஆறு நாட்களும் கோவில் வளாகத்திலேயே தங்கி தங்களது விரதத்தை தொடர்வார்கள்.

  கந்த சஷ்டி விழாவையொட்டி முருகனை வேண்டி விரதம் இருந்தால் தங்கள் குடும்பத்தில் நோய் நொடிகள் அண்டாது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாது குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு இந்த விரதத்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது .

  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை அதனால் விரதம் இருந்த பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்துள்ளனர்.

  Also see...திருச்செந்தூர் உட்பட அறுபடை வீடுகளிலும் தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா! முருக பக்தர்கள் பரவசம்!

  விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான வேல்வாங்கும் விழா வருகிற 29ஆம் தேதியும் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் 30 ஆம் தேதியும் நடைபெறும்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kandha Sashti, Kandha Sasti Kavasam, Murugan temple, Thoothukodi