ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா... தங்கத்தேரில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா... தங்கத்தேரில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்...

தங்கத்தேரில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

தங்கத்தேரில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

Tiruchendur | தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchendur (Thiruchendur), India

  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடியும் அங்க பிரதட்சணம் செய்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி  சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

  கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து மாலை சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

  Also see... தனியார் பிளாஸ்டிக் ஆலையில் பீகார் தொழிலாளி படுகொலை

  பின்னர் இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்களுடன் வழிபட்டனர். ஏராளமான பெண்கள் பின்னோக்கி நடந்தபடி மடியேந்தி வேண்டினர்.

  செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kandha Sashti, Kandha Sasti Kavasam, Murugan temple, Tiruchendur