முகப்பு /செய்தி /தூத்துக்குடி / ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசி விட்டு சாலையில் நடமாடி கொண்டிருக்கிறார் - கடம்பூர் ராஜூ

ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசி விட்டு சாலையில் நடமாடி கொண்டிருக்கிறார் - கடம்பூர் ராஜூ

 கடம்பூர் செ.ராஜூ

கடம்பூர் செ.ராஜூ

நம்ம எல்லோரும் மனங்கெட்டவர்கள் தான், திமுக எம்.பி. ஒரு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்துகளை அவதூறாக பேசி விட்டு, ரோட்ல, இந்த நாட்டில் நடமாடிக் கொண்டு இருக்கிறார். அதனை வேடிக்கு பார்க்கும் கூட்டம்தான் நம்ம கூட்டம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பூஜ்யம் தான் பரிசாக அளிப்பார்கள் என்றும் Kovilpatti | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பட்டாத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சார கட்டணத்தினை உயர்த்திய தமிழக அரசினை கண்டித்தும், கட்டணத்தினை திரும்ப பெற வலியுறுத்தியும் பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மெழுகுவார்த்தி ஏந்தி மின்சார கட்டண உயர்வினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில் திமுகவிற்கு தெம்பு, திராணி இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கட்டும், எதிர்கட்சியாக கூட வரமுடியாது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பூஜ்யம் தான் கிடைக்கும் என்றும், திமுக அரசுக்கு மக்கள் தரப்போகும் பரிசு பூஜ்யம் தான் என்றும், காலை உணவுதிட்டம் அதிமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, அதை தான் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

திமுக ஆட்சி, மின்சாரத்தை விட மோசம், சூரியன் நம்மை வதைக்கதான் செய்யும், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு அதிமுகவிற்கு உள்ளது. விரைவில் வசந்தகாலம் தான் என்றும், அதிமுக கட்சி பிரச்சினை  தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பினை பார்த்து ஓ.பி.எஸ்-ஐ விட ஏமாந்து நிலைகுலைந்து போனது திமுக தான்.

அதனால் தான் அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசு ரெய்டு நடத்தியுள்ளது. ஒரு அமைச்சர் வீட்டில் எத்தனை முறை தான் ரெய்டு செய்வார்கள் என்று தெரியவில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்.

Also see... சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

.ராசா இந்துகளை அவதூறாக பேசி விட்டு, ரோட்ல, இந்த நாட்டில் நடமாடிக் கொண்டு இருக்கிறார். அதனை வேடிக்கை பார்க்கும் கூட்டம் தான் நம்ம கூட்டம் என்றும், தமிழர்கள் ஏமாந்துபோனவர்கள் என்று திமுக நினைத்து கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக்கு கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள்” என இவ்வாறு பேசினார்.

top videos

    செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி

    First published:

    Tags: A Raja, ADMK, DMK, Sellur K. Raju, Thoothukodi