ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. அதிமுக போட்டியிடவில்லை

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. அதிமுக போட்டியிடவில்லை

 தேர்தல்

தேர்தல்

கடம்பூர் பேரூராட்சி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kadambur, India

  ரத்து செய்யப்பட்ட கடம்பூர் பேரூராட்சி தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது

  கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

  மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைத்தின் வழிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றப்படவில்லை என்பதால் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

  இதனை எதிர்த்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், மீதமுள்ள 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இதையும் படிங்க: ஆம்னி பேருந்து கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

  இதையடுத்து இன்று 1, 2 மற்றும் 11வது வார்டினை தவிர்த்து மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இருந்த இறுதி வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 12 வார்டுகளில் 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 7 வார்டுகள், மதிமுக -1, காங்கிரஸ் -1 வார்டிலும் - பாஜக 1 வார்டிலும் போட்டியிடுகின்றனர். 13 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ள நிலையில் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Tuticorin