முகப்பு /செய்தி /தூத்துக்குடி / கடம்பூர் பேரூராட்சிக்கு வரும் 29-ம் தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கடம்பூர் பேரூராட்சிக்கு வரும் 29-ம் தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோவில்பட்டி பேரூராட்சி

கோவில்பட்டி பேரூராட்சி

அடுத்த மாதம் 1ந்தேதி கயத்தாரில் உள்ள அரசு பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti, India

 ரத்து செய்யப்பட்ட கடம்பூர் பேரூராட்சிக்கு வரும் 29ந்தேதி தேர்தல்  நடைபெறும் என  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற  இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைத்தின் வழிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பாற்றப்படவில்லை என்பதால் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இதையும் படிங்க: பள்ளி கழிவறையில் 12-ம் வகுப்பு மாணவி மரணம் - உறவினர்கள் போராட்டம்

இதனை எதிர்த்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட  நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், மீதமுள்ள 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையெடுத்து வரும் 29ந்தேதி 1,2 மற்றும் 11வது வார்டினை தவிர்த்து மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இருந்த இறுதி வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடைபெறும் என்றும், அடுத்த மாதம் 1ந்தேதி கயத்தாரில் உள்ள அரசு பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Election Commission, Kovilpatti, Local Body Election 2022, Local News, Tuticorin