முகப்பு /செய்தி /தூத்துக்குடி / கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ், மருத்துவமனையில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ், மருத்துவமனையில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

ஆர்த்தி ஸ்கேன்ஸ்

ஆர்த்தி ஸ்கேன்ஸ்

IT Raid : கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் மருத்துவமனையில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சேதனை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் மருத்துவமனையில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், அங்கே முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜன் சென்னையை தலைமை இடமாக கொண்டு ஆர்த்தி ஸ்கேன்ஸ், லேப்ஸ் என்ற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 6ஆம் தேதி முதல் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் உள்ளிட்ட 25 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்.

கோவில்பட்டியிலும் அண்ணா பஸ் நிலையம் அருகேயுள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன்ஸ், உரிமையாளர் வீடு மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் என உள்ளிட்ட இடங்களில் 5 குழுக்களாக வருமான வரித்துறையினர் கடந்த 3 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர். ஆர்த்தி குழும உரிமையாளர் மற்றும் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சோதனை நேற்று இரவுடன் முடிவு பெற்றது.

5 குழுக்களாக சோதனை நடத்திய நிலையில் 4 குழுவினர் சோதனையை முடித்த நிலையில் ஒரு குழுவினர் மட்டும் தொடர்ந்து மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஒரு அட்டை பெட்டியில் நேற்று மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், 4வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சில ஊழியர்களிடம் இன்று விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும், இன்று மதியத்திற்குள் நிறைவு பெற வாய்ப்பு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read : ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை சட்டம்? ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பரிந்துரை குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சில முதலீடு மற்றும் பண பரிமாற்றம் தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

First published:

Tags: IT Raid, Kovilpatti, Thoothukudi