ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

இந்தி திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு.. தோல்வியை மறைக்க திமுகவின் கேடயம் - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சாடல்!

இந்தி திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு.. தோல்வியை மறைக்க திமுகவின் கேடயம் - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சாடல்!

கிருஷ்ணசாமி, ஸ்டாலின்

கிருஷ்ணசாமி, ஸ்டாலின்

Dr.Krishnasamy | ஆட்சியை சரிவர நடத்தமுடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  இந்தி திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்ககூடிய கேடயம் என புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

  இதுதொடர்பாக கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று கூறிவிட்டு அதனை செயல்படுத்தாமல் தற்போது மின்கட்டணத்தினை பன்டமங்கு உயர்த்தியுள்ளது.

  மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு அழுத்தம் தான் காரணம் என்று கூறும் தமிழக அரசு நீட் தேர்வினை எதிர்க்கிறார்கள். மத்திய அரசு என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா? சொத்தை காரணத்தினை தமிழக அரசு கூறக்கூடாது.

  இதையும் படிங்க : திருமாவளவனும், சீமானும் தீய சக்திகள்- ஹெச்.ராஜா ஆவேசம்

  மத்திய அரசு உயர்த்த சொல்லவில்லை. மாற்றங்களை தான் செய்ய கூறியுள்ளது. ஜி.எஸ்.டி வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்பொழுது பால் விலை உயர்வுக்கு அதனை காரணம் காட்டுவது எப்படி? அங்கேயும் ஊழல் தான்.

  ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலையை உயர்த்துகின்றனர். பால் விலை உயர்விற்கு காரணம் ஏன் என்பதனை வெளிப்படையாக கூற வேண்டும். அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

  வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு உள்ளிட்ட எந்த பிரச்சனையிலும் திமுக அரசு சரியாக செயல்படவில்லை. ஒன்று கடந்த ஆட்சி மீது அல்லது மத்திய அரசு மீது பழியை சுமத்துகின்றனர்.

  திமுக அரசு நாளுக்கு நாள் தோற்றுக்கொண்டு இருக்கிறது. எதிலும் எந்த கட்டுப்பாடும் இல்லை. திமுகவை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதையும் படிங்க : சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மாணவியை வன்கொடுமை செய்த தயாரிப்பாளர் - பொள்ளாச்சியில் மீண்டும் பகீர் சம்பவம்!

  ஆட்சியை சரிவர நடத்தமுடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  இந்தி எங்கு வருகிறது, எங்கு திணக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

  திணிக்கப்படுவதாக ஒரு கற்பனையை உருவாக்குகின்றனர். இந்தி திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்க கூடிய கேடயம்” என்றார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Dr Krishnasamy, Thoothukudi