முகப்பு /செய்தி /தூத்துக்குடி / அரசியல் நமக்கு தேவையில்லை - நடிகர் வடிவேலு

அரசியல் நமக்கு தேவையில்லை - நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம் என நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தமிழக அரசின் ஆட்சி நன்றாக உள்ளது என நகைச்சுவை நடிகர் வடிவேலு திருச்செந்தூரில்  பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடிவேலு, “நாய் சேகர் ரிட்டன், மாமன்னன் , சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக கூறினார். அரசியல் நமக்கு தேவையில்லை. சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம். தமிழக அரசின் ஆட்சி நன்றாக உள்ளது என்றார்.

Also Read:  நடிகர் சங்கம் சார்பில் போண்டாமணியை சந்தித்து நிதி உதவி வழங்கிய மனோபாலா

சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டா மணிக்கு எதாவது உதவி செய்யணும் என்றார்.

செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)

First published:

Tags: Actor Vadivelu, Politics, Tamil News, Thiruchendur