Home /News /thoothukudi /

பணம் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் வெறிச்செயல்

பணம் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் வெறிச்செயல்

மனைவியை வெட்டிய கணவன் கைது

மனைவியை வெட்டிய கணவன் கைது

Kovilpatti | தூத்துக்குடியில் பெற்றோர் வீட்டில் பணம் வாங்காமல் வந்த மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளத்தினை சேர்ந்த முனீஸ்வரிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் மரையூரைச் சேர்ந்த முனீஸ்வரனுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மதுவிற்கு அடிமையான முனீஸ்வரன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தது மட்டுமின்றி தனது மனைவியின் நகைகளை விற்று மது குடித்து வந்துள்ளார்.

மேலும் பணம் வேண்டும் என்று கூறி முனீஸ்வரன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கணவன் தொந்தரவு தாங்க முடியமால் முனீஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் பல்லாகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் பல்லாகுளத்திற்கு வந்த முனீஸ்வரன், பணம் வாங்கி வராமல் இங்கு இருப்பது ஏன் என்று கூறி தனது மனைவியுடன் தகராறு செய்ததது மட்டுமின்றி, அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

Also see... கொடைக்கானல்:தூண்பாறையை மறைத்து கட்டப்பட்ட சுவரை இடிக்கும் பணி துவக்கம்

இதையடுத்து காயமடைந்த முனீஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கபட்டது. புகாரை பெற்றுக்கொண்ட சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Husband jailed, Husband Wife, Kovilpatti

அடுத்த செய்தி