Home /News /thoothukudi /

கோவில்பட்டியில் பலத்த மழை... சுரங்கப்பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்... பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்...

கோவில்பட்டியில் பலத்த மழை... சுரங்கப்பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்... பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்...

சுரங்கப்பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்

சுரங்கப்பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்

Thoothukkudi | கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கபாலம் மழை நீரில் சூழ்ந்து வெள்ளம் போல இருந்தது. அதில் எதிர்பாராத வசமாக தனியார் பள்ளி வாகனம் சிக்கியது. இதனால் பயத்தில் குழந்தைகள் கதறி அழுதனர். உடனே அங்கு அருகில் இருந்த மக்கள் குழந்தைகளை காப்பாற்றினர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாலையில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகனங்கள் மின்விளக்கினை போட்டபடி ஊர்ந்து சென்றன. இந்த பலத்த மழையில் காரணமாக  இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்கபால பாதையில் மழை நீர் தேங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற கோவில்பட்டி ஏ.வி மேல் நிலைப்பள்ளி வாகனம் மழைநீரில் சிக்கியது. அதில் சென்ற குழந்தைகள் கதறினார்.

இந்த கதறல் சத்தத்தினை கேட்ட அருகில் இருந்த மக்கள் விரைந்து சென்று குழந்தைகளை காப்பாற்றினர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு பலத்த மழையின் போது சுரங்கபாலத்தில் வாகனங்கள் சிக்கி கொள்வது தொடர்கதையாக உள்ளது. சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் அமைக்கவில்லை என்பதால் மழைநீர் சுரங்கபாலத்தில் புகுந்து தேங்கி விடுகிறது.

Also see... ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு...

பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஒவ்வொரு மழையின் போது இது போன்ற சம்பவம் இந்த பாலத்தில் அரங்கேறி வருகிறது. மேலும் இது போன்ற காலங்களில் போக்குவரத்தினை மாற்றிவிட காவல்துறை அல்லது நகராட்சி நிர்வாகம் முன்வருவம் இல்லை என்று பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Flood, Heavy rain, Kovilpatti, School Bus, Thoothukudi

அடுத்த செய்தி