ஓட்டுநர், நடத்துனர் இல்லாமல் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அரசுப் பேருந்து நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து லெக்கமாள்தேவி கிராமத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்தினை இயக்க ஓட்டுநர், நடத்துனர் இல்லாத காரணத்தினால் பேருந்து நிலையத்தில் ஒருமணி நேரத்திற்கு மேலாக அரசுப் பேருந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பயணிகளுடன் நிற்கும் பேருந்து
இதனால் அதில் இருந்த பயணிகள் ஒரு மணி நேரத்திற்க மேலாக அவதிப்பட்டனர். பின்னர் ஓட்டுநர், நடத்துநர் வரவழைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது.
அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி கிளையில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர் பலர் விடுமுறையில் சென்றுவிட்டதால் இருக்கும் ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்கி வருவதாகவும், இதனால் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Thoothukudi)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.