Home /News /thoothukudi /

நெடுஞ்சாலையில் உள்ள எச்சரிக்கை பலகைகளை குறிவைத்து திருடிய கும்பல் கைது..

நெடுஞ்சாலையில் உள்ள எச்சரிக்கை பலகைகளை குறிவைத்து திருடிய கும்பல் கைது..

நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை பலகைகளை திருடிய கும்பல் கைது - விளாத்திக்குளம்

நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை பலகைகளை திருடிய கும்பல் கைது - விளாத்திக்குளம்

Thoothukkudi | தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - தூத்துக்குடி செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த எச்சரிக்கை பலகைகளை திருடிய 3 பேர் கொண்ட கும்பலை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்த பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - தூத்துக்குடி செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறையின் சார்பில், விபத்து பகுதி மற்றும் வளைவு பகுதிகளில் முன்னெச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் இரும்பு பலகைகள் வைக்கப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதியதாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கும் - மீனாட்சிபுரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த 10 எச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் 11 பிரதிபலிப்பாக இருக்கும் இரும்பு பலகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஆதியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜேம்ஸ் பழைய இரும்பு வியாபாரம் என்று பெயர் போட்டு இருந்த லோடு ஆட்டோ ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி கொண்டு இருந்தாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு அந்த லோடு ஆட்டோவை மடங்கி பிடித்தனர். லோடு ஆட்டோவில் காணாமல் போன நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை பலகைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லோடு ஆட்டோவில் இருந்த வேம்பாரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அந்தோணி ஜேம்ஸ் (வயது 25), நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுத்து மகன் கருப்பசாமி (42) மற்றும் ராமசாமி மகன் ஆத்தி (42) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

Also see... சுதா மருத்துவமனைக்கு ஆதரவாக தனியார் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்

லோடு ஆட்டோவில் இருந்த பொருள்களையும், லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். பொருள்களின் மதிப்பு 65,000 இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்யவில்லை என்றால் விளாத்திகுளம் - தூத்துக்குடி சாலையில் உள்ள அனைத்து எச்சரிக்கை பலகைகளையும் இந்த கும்பல் தட்டி தூக்கி இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர்.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Vilathikulam

அடுத்த செய்தி