Home /News /thoothukudi /

பாரத் பெட்ரோலியம் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி: 2 பேர் கைது

பாரத் பெட்ரோலியம் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி: 2 பேர் கைது

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இருவர் கைது

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இருவர் கைது

Thoothukudi district News: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெயரில் பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப் என்ற இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு உரிமம் பெற்று தருவதாக தூத்துக்குடியில் ஆயில் மில் உரிமையாளரிடம் பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(56). இவர் விவசாயம் மற்றும் ஆயில் மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி குமரவல்லி வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு (05.09.2021) கூகுள் இணையத்தில் பாரத் பெட்ரோலியம் என்ற பெயர் சம்பந்தமாக தேடும்போதும், பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப் என்று தேடும் போதும் பாரத் பெட்ரோலியம் என்ற பெயரில் ஒரு இணையதளம் இருந்துள்ளது.

அந்த இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்துள்ளார். பதிவு செய்த சில நாட்களில் பாஸ்கர் என்ற பெயரில் ஒருவர் குணசேகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாரத் பெட்ரோலியம் நிறுவனம்  மார்க்கெட்டிங் பிரிவிலிருந்து தாங்கள் பேசுவதாகவும், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் பெறுவதற்கு அவரது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், தகுதிச் சான்று, வங்கி விபரங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் வாட்ஸ் அனுப்புமாறு கூறியுள்ளார்.

அதை நம்பி குணசேகரன் கேட்டவற்றை எல்லாம் அனுப்பியுள்ளார். பின்னர் கணக்கிற்கு பதிவுக்காக 19,500 ரூபாய் பாரத் பெட்ரோலியம் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று பாரத் பெட்ரோலியம் என்ற ஒரு வங்கி கணக்கை  கொடுத்துள்ளனர். அந்த வங்கி கணக்கில் குணசேகரன் பணத்தை செலுத்தியுள்ளார். இதையெடுத்து அந்த நபர்கள் பணம் பெற்று கொண்டதற்கான பாரத் பெட்ரோலியம் பெயரில் ரசீதும் வழங்கியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் குணசேகரனை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் டீலர்ஷிப் சான்று பெறுவதற்காக ரூபாய் 1,10,000 செலுத்துமாறு கூறி, பாரத் பெட்ரோலியம் என்ற பெயரில் மற்றொரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்துள்ளனர். குணசேகரன் அதனையும் செலுத்தியுள்ளார். அதற்கும் ரசீது வழங்கியுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து உரிமம் பெறுவதற்காக 3,50,000 பணம் செலுத்த வேண்டும் என்றும், பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தும் படி தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வங்கி கணக்கு எண் கொடுக்கப்பட்டதால் சந்தேகமடைந்த குணசேகரன், பாரத் பெட்ரோலியம் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்துள்ளார்.

அப்போதுதான் அந்த இணையதளம் போலி என்பதும், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் அறிவிப்பு எதையும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம்  கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை குணசேகரன் உணர்ந்துள்ளார். இதையெடுத்து நேஷனல் சைபர் க்ரைமில் அவர் புகார் செய்துள்ளார். இதையெடுத்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை தேடிவந்தனர். மேலும் இதுகுறித்து தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குணசேகரன்


இந்நிலையில், அந்த போலி இணையதளத்தை உருவாக்கியவர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த நாரோட்டம் சுபோஜித் குமார் ராய் (33) என்பதும், மேற்படி மோசடிக்கு உடந்தையாக இருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த  சுமன் மண்டல் (36) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து  தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் மாநிலம் சென்று  இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பாதிக்கப்பட்ட குணசேகரன் கூறுகையில், பாரத் பெட்ரோலியம் பெயர், லோகா, அந்நிறுவன கடிதம் போல் இருந்தால் தான் ஏமாந்து போனதாகவும், ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கினை மாற்றி பணம் கேட்டதால் சந்தேகம்அடைந்து விசாரணை நடத்திய போது, அது போலி என்று தெரியவந்ததாகவும் கூறினார்.

Must Read : போரூர் அருகே காரில் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்.. 6 பேர் கைது

இதனை தொடர்ந்து தான், சைபர் கிரைமில் புகார் அளித்ததாகவும், ஒரு கும்பலாக இருந்து இது போன்ற மோசடிகளை செய்து வரலாம், ஒரு வங்கி கணக்கு ஆரம்பிக்க பல்வேறு ஆவணங்களை  வங்கிகள் கேட்கும் நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கியது எப்படி என்று தெரியவில்லை என்றும் கூறிய குணசேகரன் போலீசார் முழு விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே தெரியவரும் என்றார்.

பாரத் பெட்ரோலியம் பல்க் டீலர்ஷிப் என்ற பெயரில் இணையதளம், 3 வங்கிகளில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு ஆகியவற்றை காண்பித்து விவசாயிடம் பணம் பறித்து சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Petrol, Thoothukudi

அடுத்த செய்தி