தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழழகன். இவர் இன்று தனது சகோதரர் கடல்ராஜா, சகோதரர் மகன் காசிதுரை ஆகியோருடன் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு காரில் வந்தனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த தமிழழகனின் மகன் காசிராஜன் தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது, அவரது தந்தையுடன் வந்த கடல் ராஜா, காசிதுரை ஆகியோரை முதலில் அரிவாளால் வெட்டியுள்ளார். தொடர்ந்து தந்தையையும் வெட்ட முயன்ற போது மகன் கையில் இருந்த அரிவாளை பிடிங்கி தந்தையே மகன் காசிராஜனை வெட்டி கொலை செய்துவிட்டு அரிவாளுடன் காயம்பட்ட உறவினர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காசிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழழகனை கைது செய்து விசாரணை செய்ததில் கடந்த 2020 ஆம் ஆண்டு காசிராஜனின் மனைவிக்கு தந்தை தமிழழகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தின் முன்விரோதம் காரணமாகவும், சொத்து பிரச்சனை காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். காசிராஜன் ஏற்கனவே 2 முறை தனது தந்தையை கொலை செய்ய முயன்றதும் இது தொடர்பான வழக்கு புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ளது.
செய்தியாளர்: முரளி கணேஷ். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.