ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

''மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. காரணம் இதுதான்'' - மேடையில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்!

''மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. காரணம் இதுதான்'' - மேடையில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்!

மாதிரி படம்

மாதிரி படம்

Aadhar: தூத்துக்குடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆதார் இணைப்பு குறித்து பேசினார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi

ஆதார் எண்ணை இணைத்த பிறகு ஒரு இணைப்புக்கு மேல் மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதற்காக மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுந்தகவல் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டையை வைத்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆதார் இணைப்பு குறித்து பேசினார்.

அப்போது, ஆதார் எண்ணை இணைத்த பிறகு ஒரு இணைப்புக்கு மேல் மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது என்ற அதிர்ச்சி கருத்தை தெரிவித்தார். மேலும், மின் கட்டண உயர்வை மாநில அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

First published:

Tags: Aadhar, EB Bill, Local News, Thoothukudi