தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அக்கிராம இஸ்லாமியர்களால் வழங்கப்பட்ட சமத்துவம் பிரியாணி விருந்தில் ஜாதி, மத வேறுபாடின்றி, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா ஆண்டு தோறும் 3 நாள்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின் இறுதி நாளில் சமத்து பிரியாணி விருந்து நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு கந்தூரி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. வெகு விமர்சையாக நடைபெற்ற விழாவில் இக்கிராமத்தினை சேர்ந்த வெளியூர், வெளி நாடுகளில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் திரளான கலந்து கொண்டனர். விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சமத்துவ பிரியாணி விருந்து நடைபெற்றது.
இந்த சமத்துவ விருந்தில் சுற்றுவட்டார 25 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் ஜாதி, மத வேறுபாடுகளை தகர்த்தெறிந்து ஒற்றுமையாக அனைவரும் ஒன்றாக கூடி அமர்ந்து விருந்தில் வழங்கப்பட்ட பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர். "சமத்துவ பிரியாணி விருந்தைத் தொடர்ந்து" மழலைகளிடமிருந்தே ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Biryani, Food, Mutton Biryani, Tamil News, Thoothukudi