மின்கட்டண உயர்வினை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் ,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அதிமுகவினர் அரிக்கேன் விளக்கு கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு , அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் அரிக்கேன் விளக்கினை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.