முகப்பு /செய்தி /தூத்துக்குடி / தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா விமர்சனம்

தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா விமர்சனம்

எச்.ராஜா

எச்.ராஜா

Tuticorin News :தமிழைத் தேடி யாத்திரை என்றால் அப்போம் தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம் என எச்.ராஜா பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தமிழுக்கு  முதல் எதிரி திராவிடம் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்றால் அப்போது  தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம். தமிழை தொலைத்த திருடன் யார்?.

திராவிடம் தான் நீதிக்கட்சி வழியாக வந்தவர்கள் தான் தமிழை தொலைப்பதற்காக திராவிடத்தை கொண்டு வந்தார்கள். திராவிடத்தை அளிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர்: முரளி கணேஷ் ( தூத்துக்குடி)

First published:

Tags: BJP, HRaja, Local News, Tamil News, Tuticorin