முகப்பு /செய்தி /Thoothukudi / டீக்கடையில் தினமும் சமோசா வாங்கி சாப்பிடும் கழுதை - சாத்தான்குளத்தில் ருசிகரம்!

டீக்கடையில் தினமும் சமோசா வாங்கி சாப்பிடும் கழுதை - சாத்தான்குளத்தில் ருசிகரம்!

கழுதை

கழுதை

Thoothukudi : சாத்தான்குளத்தில் கழுதை ஒன்று, கடைக்கு எப்போதும் வந்து உணவு கேட்டு தொந்தரவு செய்யாமல் தினமும் காலை 5 மணி மற்றும் மாலை 5 மணிக்கு மட்டும் வந்து உணவை பெற்று உட்கொண்டு வருகிறது. 

  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் டீக்கடை திறக்கும் முன்பே தினமும் அங்கு வந்து காத்திருக்கும் கழுதை ஒன்று, சமோசா மற்றும் வாழைப்பழம் வாங்கி சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கடை திறந்தவுடன் கழுதைக்கு கொடுத்துவிட்டு தான் வியாபாரத்தை துவங்குகிறார் டீக்கடை உரிமையாளர்.

“என்னை பார் யோகம் வரும்” என ஒரு முதுமொழி உண்டு. இந்த முதுமொழிக்கு ஏற்ப சாத்தான்குளத்தில் ஒரு டீக்கடைக்காரர் தினமும் காலை கடை திறந்தவுடன் அவருக்காக காத்திருக்கும் ஒரு கழுதைக்கு, முதலில் உணவு கொடுத்துவிட்டு தான் வியாபாரத்தை துவங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சாத்தான்குளம் தச்சமொழி பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் அருண் ஞானமுத்து என்பவர் அவரது டீ கடையில் தினமும் கடையை திறப்பதற்கு முன்பே இவரது கடைவாசலில் கழுதை ஒன்று வெகுநேரமாக காத்திருக்கும். பின்னர் இவர் வந்த பிறகு கடை திறந்து வியாபாரம் செய்வதற்கு முன்பு இந்த கழுதைக்கு சமோசா அல்லது வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் கொடுத்து விட்டுதான் வியாபாரத்தை தொடங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அந்த டீகடைக்காரர் அருண் ஞானமுத்து,

இந்த கழுதையானது இக்கடைக்கு எப்போதும் வந்து உணவு கேட்டு தொந்தரவு செய்யாமல், தினமும் காலை 5 மணி மற்றும் மாலை 5 மணிக்கு மட்டும் வந்து சமோசா அல்லது வாழைப்பழம் வாங்கி உட்கொண்டுவிட்டு சென்றுவிடும்.  பின்னர் மறுநாள் காலையில் தான் மீண்டும் வரும் என்று கூறுகிறார்.

Must Read :  உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை.. கள்ளக்காதலன் வெறிச்செயல்

சாத்தான்குளத்தில் டீக்கடைக்காரருக்கும் கழுதைக்குமான இந்த அன்பான ருசிகர சம்பவம் பார்ப்போர் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துவருகிறது.

top videos

    செய்தியாளர்- பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

    First published:

    Tags: Sathankulam, Tea Stall, Thoothukudi