ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தூத்துக்குடியில் தேவரின் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி மரியாதை..!

தூத்துக்குடியில் தேவரின் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி மரியாதை..!

கனிமொழி

கனிமொழி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தேவரின் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி மரியாதை செலுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi (Thoothukudi), India

  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தேவரின் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருஉருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான முத்துராமலிங்க தேவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

  இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, “வேற்றுமைகள் களைந்து சமத்துவமிக்க சமுதாயம் உருவாக்கிடத் தொண்டாற்றிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாளான இன்று, தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

  செய்தியாளர் : முரளி கணேஷ் (தூத்துக்குடி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Devar Jayanthi, DMK, Kanimozhi, Muthuramalinga Thevar, Tamil News