ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தூத்துக்குடி: அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் பேனர்.. தகராறு ஏற்பட்டதில் விசிக நிர்வாகி கொலை!

தூத்துக்குடி: அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் பேனர்.. தகராறு ஏற்பட்டதில் விசிக நிர்வாகி கொலை!

கொலை

கொலை

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர் வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் போர்டு ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக விசிக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் அவரது மகனும் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  தூத்துக்குடி 3 சென்ட் பகுதியில் அம்பேத்கர் சிலை முன், அதே பகுதியை சேர்ந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அந்த பேனரை மாரிமுத்துவின் மகன் கரண் கிழித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாரிமுத்து மற்றும் முகேஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், மாரிமுத்துவை முகேஷ் தலைமையிலான கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதனை தடுக்க வந்த கரனையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.

  Also see...''டும்..டும்.. தண்ணி தேங்குது''.. குடியிருப்புகளில் மழைநீர்.. நீருக்குள் நின்று தவில் அடித்த வித்வான்!

  இந்த படுகொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியகொலை கும்பலை தேடி வருகின்றனர். டிஜிட்டல் போர்டு வைத்ததில் ஏற்பட்டதகராறு காரணமாக படுகொலை நடந்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: முரளி கணேஷ், தூத்துக்குடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Banners, Thoothukodi, VCK