ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா... பக்தர்கள் போலீஸ் வேடமிட தடை - காவல்துறை உத்தரவு

குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா... பக்தர்கள் போலீஸ் வேடமிட தடை - காவல்துறை உத்தரவு

குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா...

குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா...

Thoothukkudi | குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்கள் நேர்சையாக போலீஸ் போன்று சீருடை அணிந்து " போலீஸ் வேடமிட தடை" என்று தூத்துக்குடி மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில், ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோ, காவல் துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இது தொடர்பாக _  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறியிருப்பதாவது, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும்  ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப்பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும்,  தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதி பெற்று அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  குலசைமற்றும் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களுடன் தற்காலிக காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும், திறந்தவாகனங்களில் அசாதாரண சூழலில் ஆட்களை/பக்தர்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப் பொருட்களையும் கொண்டு வருவதோ, ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோ, காவல் துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் சைகைகள் ஏற்படுத்தவோ அனுமதி இல்லை.

  காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்மந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலிபெருக்கி பயன்படுத்தவோ ஆடல், பாடல் போன்ற இசைநிகழ்ச்சிகளோ, எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தவோ,  இராட்டிணங்கள் அமைத்து தொழில் செய்யவோ, யாருக்கும் அனுமதியில்லை.

  Also see... கோவில் பூசாரியிடம் ரூ.21,000 லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது...

  பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடத்தில் அதிக நேரத்தில் நிறுத்திக் கொண்டு வான வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைகருவிகளை இசைத்துக் கொண்டோ மற்ற பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மேற்படி விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர்: முரளி கணேஷ், தூத்துக்குடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Thoothukodi