தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்தவர் மீனவர் ஜெரோம். இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் முயல் தீவு கடற்பகுதி அருகே மீன்பிடிப்பதற்காக தனது பைபர் படகில் 3 மீனவர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கே நடுக்கடலில் மான் ஒன்று கடலில் தத்தளித்தபடி நீந்தி கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெரோம் பின்னர் கரைக்கு வந்து மற்றொரு பைபர் படகில் மேலும் மீனவர்களை அழைத்துக் கொண்டு 2 படகில் சென்று கடலில் தத்தளித்த மானை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் மானை மீட்டது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில், கடலில் தத்தளித்த இந்த மான் ஓட்டப்பிடாரம் காட்டுப் பகுதியில் இருந்து தருவைகுளம் கடல் பகுதி வழியாக கடலுக்குள் சென்று இருக்கலாம் என கூறிய வனத்துறையினர் இந்த மான் மிளா வகையைச் சேர்ந்தது என்றும், சுமார் 4 அடி உயரமும், ஒரு அடி உயர கொம்புகளுடன் 200 கிலோ எடைக்கு மேல் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட இந்த மானை இனிகோ நகர் கடப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிசயத்துடன் பார்த்து சென்றதுடன் மானை மீட்ட மீனவர்களையும் வெகுவாக பாராட்டி சென்றனர்.
பின்னர் மீனவர்களின் உதவியுடன் மானை வனக்காப்பாளர் லோடு ஆட்டோவில் ஏற்றி ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள சாலிகுளம் வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட மானை ஒப்படைக்க வனத்துறையிடம் மீனவர்கள் காலை 6 மணிக்கு தகவல் கூறியும் சுமார் 3 மணி நேரம் கழித்து ஒரே ஒரு வனக்காப்பாளர் மட்டும் வந்து மானை மீட்டு சென்றார்.
செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thoothukudi