ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தீர்ப்பு: ஏழு பேரை தூக்கிலிடக்கோரி காங்கிரஸ் நூதன போராட்டம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தீர்ப்பு: ஏழு பேரை தூக்கிலிடக்கோரி காங்கிரஸ் நூதன போராட்டம்!

போராட்டம் நடத்திய காங்கிரஸார்

போராட்டம் நடத்திய காங்கிரஸார்

விடுதலை செய்யப்பட்ட ஏழு பேரையும் தூக்கிலிட நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தூத்துகுடியில் போராட்டம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

    பேரறிவாளன் உள்பட ஏழு பேரின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டி 7 பேரையும் தூக்கிலிட தீர்மானம் நிறைவேற்றிடவும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த மே 18ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருந்த 6 பேர் நேற்று (நவம்பர் 11) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்களின் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் உச்சநீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது தவறான முடிவு என்றும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தெரிவித்திருந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

    இதையும் படிக்க : வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று , விடுதலையாகியுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டத்தை கூட்டி ஏழு பேரையும் தூக்கிலிட தீர்மானம் நிறைவேற்றி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Congress, Rajiv convicts, Rajiv Gandhi Murder case