முகப்பு /செய்தி /தூத்துக்குடி / தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி மாணவன் உயிரிழப்பு.. தூத்துக்குடியில் சோகம்..

தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி மாணவன் உயிரிழப்பு.. தூத்துக்குடியில் சோகம்..

ரயில் மோதி மாணவன் உயிரிழப்பு

ரயில் மோதி மாணவன் உயிரிழப்பு

Thoothukudi News : தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.  

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணநகரில் அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கழுகுமலையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரது மகன் பாலகணேஷ் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு கழுகுமலையில் இருந்து பஸ்சில் பாலகணேஷ் சென்றுள்ளார். இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தத்தில் இறங்கி கல்லூரி செல்வதற்காக அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்ற நாகர்கோவில் - கோவை விரைவு ரயிலில் அடிபட்டு பாலகணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்தும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு கல்லூரிக்கு இயக்கப்பட்டு வந்த 2 அரசு பஸ்கள் கொரோனாவிற்கு பிறகு நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தண்டவாளத்தினை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மினிபேருந்தில் தொங்கி கொண்டு கல்லூரிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு கல்லூரிக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Local News, Thoothukudi